எஸ்ஆர்எஃப் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% அதிகரித்து ரூ.509.12 கோடியானது. மத்தியப் பிரதேசத்தில் ரூ.600 கோடியில் பேட்டரிக்கான அலுமினியத் தகடு ஆலை அமைக்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.388.18 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.3,665.90 கோடியிலிருந்து ரூ.4,929.14 கோடியாக உயர்ந்தது.
ஜேதாப்பூரில் அமையும் ஆலையின் ஆண்டுத் திறன் 12,000 டன். தலா ரூ.300 கோடியில் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதற்கட்டம் செப்டம்பர் 2028-லும், இரண்டாம் கட்டம் செப்டம்பர் 2030-லும் நிறைவடையும். இந்த ஆலை லித்தியம் அயன், சோடியம் அயன் பேட்டரி பயன்பாடுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்.